தடுப்பூசி, நோய் தடுப்பு நடவடிக்கையை கலெக்டர்கள் விரிவுபடுத்த வேண்டும்: மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:  கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 2,011 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 1,675 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். இதை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று நோய்த் தடுப்புகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா பரவல் விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைந்தாலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை குறைக்கக் கூடாது.

Related Stories:

More