×

அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை: அரசாணை வெளியீடு

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியக்கோரிக்கையின் போது, அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அறிவிப்பு வெளியிட்டார். சில நிபந்தனைகளுக்குட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில் கைதிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அதனை செயல்படுத்தும் விதமாக முன்விடுதலை செய்ய ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்களை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பாலியல் பலாத்காரம், தீவிரவாதம், வழிப்பறி, மத மோதல், ஜாதி மோதல், அரசிற்கு எதிராக செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றம் செய்தவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும், இவற்றை முறையாக ஆய்வு செய்து வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து அமைக்கப்பட்டுள்ள குழுவினர், தமிழ்நாடு அரசிற்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Annan , Life sentence, prisoners, release, government, release
× RELATED அண்ணன் ஜெயிச்சா உங்கள தங்கத்தட்டுல...