உலக அமைதி வார விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவர்கள் சார்பில், உலக அமைதி மற்றும் நல்லிணக்க வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தூ.ப.வெங்கடபெருமாள் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் பி.ரவிசங்கர் முன்னிலை வகித்தார். என்சிசி பர்ஸ்ட் ஆபீஸர் சுப.ஜெயசீலன் வரவேற்றார். இதில், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ஏ.ராஜமூர்த்தி, வி.நம்பி பாலசுப்பிரமணியன், என்சிசி சார்ஜன்ட் கீர்த்திவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் எதிரே மருத்துவமனை நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்சிசி சீருடை அணிந்து, கைகளில் பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி அமைத்து உலக அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories:

More