×

வடகிழக்கு பருவமழை காணொலிக் காட்சி வாயிலாக கலந்தாய்வு கூட்டம்

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை காரணமாக வானிலை ஆய்வு மையம் அடுத்து வரும் நாட்களில் கன மழைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், காணொலிக் காட்சி வாயிலாக அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தார்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்து வரும் கனமழையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக, பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நிவாரணப் பணிகளையும் தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து, அடுத்து வரும் நாட்களில் அதித கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர் ஏற்படும் சமயத்தில் பொதுமக்களை காப்பது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது போன்ற தருணங்களில் அரசுடன் இணைந்து செயல்பட தன்னார்வ தொண்டு நிறுவனத்தார்களிடம் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார். இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.மீனா பிரியா தர்ஷிணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வித்யா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Consultation Meeting via Northeast Monsoon Video
× RELATED சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி...