×

கேரளாவிலும் சிறப்பு சேவை தொடங்கியது வாழைக்குளம் அன்னாசி பழம் விவசாய ரயிலில் பயணம்

* கேரளாவில் ஆண்டுதோறும் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 5.5 லட்சம் டன் அன்னாசி பழங்கள் விளைவிக்கப்படுகிறது.
* வாழைக்குளம் அன்னாசியின் மீது வட மாநில மக்களுக்கு எப்போதுமே ஒரு தனி ஈர்ப்பு உண்டு.

கொச்சி: கேரளாவின் வாழைக்குளம் பகுதியில் இருந்து டெல்லிக்கு முதல் முறையாக விவசாயிகள் ரயில் திட்டத்தின் கீழ் 2.5 டன் அன்னாசி பழம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வாழைக்குளத்தில் விளைவிக்கப்படும் அன்னாசி பழங்கள் பிரபலமானவை. வழக்கமாக இங்கிருந்து லாரிகள் மூலமாக டெல்லிக்கு அன்னாசி பழங்கள் அனுப்பி  வைக்கப்படும். இந்த லாரிகள் டெல்லி சென்றடைவதற்கு 5 நாட்களாகும். தற்போது, ஒன்றிய அரசு விவசாய விளைப்பொருட்களை மட்டும் ஏற்றிச் செல்லக்கூடிய, ‘விவசாயிகள் ரயில் சேவை’ திட்டத்தை அறிமுகம்  செய்துள்ளது.

மகாராஷ்டிரா, பீகாரில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது கேரளாவிலும் இந்த ரயில் சேவை தொடங்கியுள்ளது. இந்த ரயில் மூலமாக 50 மணி நேரத்தில் விளைபொருட்கள் டெல்லி சென்றடைந்து விடும். கேரளா விவசாயிகள் சங்கம் சார்பாக முதல் முறையாக நேற்று 2.5 டன் அன்னாசி பழங்கள், எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்தில் இருந்து நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் விவசாய ரயிலில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து  விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் ஜார்ஜ் கூறுகையில், “முதல் முறையாக  ரயிலில் நாங்கள் பழங்களை அனுப்பி வைத்துள்ளோம். இது  வெற்றி பெற்றால் தொடர்ந்து அதிக அளவில் பழங்களை அனுப்பி வைப்போம்,” என்றார்.


Tags : Kerala , Special service started in Kerala too
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...