×

மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்கினால் சலுகைகளை தவறாக பயன்படுத்தக்கூடும் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ ஆதிதிராவிட வகுப்பை (பிற்படுத்தப்பட்டோர்) சேர்ந்த நபர், அருந்ததியரை திருமணம் செய்த நிலையில் கலப்பு மண சான்று கேட்டு வழக்கு தொடரப்பட்டது. 1997 அரசாணைப்படி மதம் மாறிய நபர்களுக்கு கலப்பு மண சான்றிதழ் தர மறுத்ததாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags : Chennai High Court , High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...