×

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பில்லை :வானிலை ஆய்வு மையம்

சென்னை : வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போது இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாவிட்டாலும் ஏற்கனவே கூறியபடி நாளை முதல் கனமழை இருக்கும் என்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து,வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நவம்பர் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுத்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்.தமிழ்நாட்டின் கரை நோக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதால் நவம்பர் 29ம் தேதிக்கு பின் மழைக்கு வாய்ப்பு இருக்கும், என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே சென்னை பாரிமுனையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.சேப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Tags : Bay of Bengal ,Meteorological Center , வங்கக்கடல்
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...