×

கோவாக்சின், கோவிஷீல்டு போதுமான அளவில் கையிருப்பு உள்ளது!: மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 11வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தயக்கம் காட்டாமல் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை மின் தங்கசாலை பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 155 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 1 கோடியே 1 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும், சுமார் 72 லட்சம் பேர் இரண்டாம் தவணை செலுத்த வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார்.

கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டுமே போதுமான அளவில் கையிருப்பில் இருப்பதால் மக்கள் எந்தவித தயக்கமும் காட்டாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தடுப்பூசி செலுத்திய பின்பும் கொரோனா தொற்று ஏற்பட்டால் அதனால் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனே சிறந்த உதாரணம் என்று கூறிய மா.சுப்பிரமணியன், நோய் பாதிப்பின் தீவிரத்தை தடுப்பூசி கட்டுப்படுத்துவதை உணர்ந்து மக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


Tags : Gowakin ,Gowifield ,Minister ,Ma ,Subramanian , Kovacsin, Covshield, Vaccine, Ma.Subramanian
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...