×

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.எம்.பஷீர் திமுகவில் இணைந்தார்!: ஓ.பி.எஸ். நிலைமை பரிதாபமாக இருப்பதாக விமர்சனம்..!!

சென்னை: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருப்பதாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜே.எம்.பஷீர் விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர் ஜே.எம்.பஷீர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்கள் உடன் திமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நீடிப்பதாக கூறினார். அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சிறுபான்மையினர் செயலாளர் அன்வர் ராஜாவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்க முயன்றதாக கூறிய பஷீர் அதிமுக அழிவுப்பாதையில் செல்வதாக தெரிவித்தார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தவர் ஜே.எம்.பஷீர். எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.


Tags : JM Bashir ,AIADMK ,DMK , AIADMK, JM Basheer, DMK
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...