×

முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகள் சீட்டு கம்பெனிகளை போல ஆபத்தானவை :முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை

மும்பை : முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகள் சீட்டு கம்பெனிகளை போல ஆபத்தானவை என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்து ரிசர்வ் வங்கியின் மூலம் அதிகாரப்பூர்வ கிரிப்டோ கரன்சிகளை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஓரிரு கிரிப்டோ கரன்சிகள் மட்டுமே எதிர்காலத்தில் தாக்குப் பிடிக்கும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பொருளாதார ஆலோசகருமான ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

6000த்திற்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் சந்தையில் இருந்தாலும் பெரும்பாலானவற்றுக்கு மதிப்பே இல்லை என்றும் கிரிப்டோ சொத்துக்களை வைத்திருக்கும் பலர் பாதிக்கப்பட கூடும் என்றும் எச்சரித்துள்ளார். முறைப்படுத்தப்படாத மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத சிட் பண்டுகள் எந்த அளவிற்கு ஆபத்தோ, அதே போல தான் முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகளும் ஆபத்தானவை என்று கூறும் அவர், சீட்டு கம்பெனிகள் எப்படி மக்களின் பணத்தை திருடிக் கொண்டு மாயமாகிறார்களோ அதே போல தான் கிரிப்டோ கரன்சிகளும் ஆபத்து நிறைந்தவை என்று எச்சரித்துள்ளார். 


Tags : Former Reserve Bank ,Governor ,Raghuram Rajan , சீட்டு கம்பெனி
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...