×

என்னை மாணவர்கள் தவறாக நினைப்பதால் அவமானமாக இருக்கிறது!: கரூர் பள்ளிமாணவி விவகாரத்தில் தற்கொலை செய்த கணித ஆசிரியர் கடிதம் சிக்கியது..!!

கரூர்: கரூர் பள்ளி மாணவி விவகாரத்தில் தற்கொலை செய்த கணித ஆசிரியர் சரவணன் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ளது. கரூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 19ம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றதும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் மூலம் தெரியவந்தது. பாலியல் துன்புறுத்ததால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும் என மாணவி அந்த கடிதத்தில் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே மாணவி பயின்ற பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தமது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுவிட்டு அவரது மாமனார் வீட்டிற்கு சென்ற ஆசிரியர் அங்கேயே தற்கொலை செய்துகொண்டார். பாலியல் தொல்லை தொடர்பாக பள்ளியில் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், கணித ஆசிரியரின் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இது தொடர்பாக துறையூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்கொலை செய்த கணித ஆசிரியர் சரவணன் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாருக்கு சிக்கியிருக்கிறது. அதில், மாணவர்கள் என்னை தவறாக நினைக்கிறார்கள்; நான் எந்த தவறும் செய்யவில்லை; ஏன் இப்படி கூறுகிறார்கள். நான் மாணவர்களை கோபத்தில் திட்டி இருக்கிறேன்; அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். என்னை மாணவர்கள் தவறாக நினைப்பதால் அவமானமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : Karur Schoolboy , Karur schoolgirl, suicide, math teacher, letter
× RELATED தென்காசி மாவட்டத்தில் வெயிலின்...