×

இருபுறமும் தடுப்புச் சுவருடன் அமையும் திண்டுக்கல் - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை!: விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைக்காக சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்படும் தடுப்புச்சுவரால் விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது. திண்டுக்கல்லில் இருந்து பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வரை 140 கி.மீட்டருக்கு 6 வழிச்சாலை அமைப்பதற்காக 2,000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. தற்போது 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், சாலையின் இருபுறங்களிலும் மூன்றரை அடி உயரத்திற்கு தொடர் தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் விவசாய நிலங்கள், நீர்வழிப்பாதைகள் இருப்பதால் தடுப்புச்சுவரால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயப்பணிகளுக்காகவும், கால்நடைகளை அழைத்துசெல்லவும் இந்த தடுப்புச்சுவர் தடையாக உள்ளது. மழைநீர் வடிகால்களுக்கு பதிலாக ஒன்றிய அரசு தடுப்புச்சுவர் அமைப்பதாக கூறும் அப்பகுதியினர், விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோவதாக தெரிவிக்கின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி இந்த சாலையின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் அவசர தேவைகளுக்காக சாலையை பயன்படுத்த முடியாத அளவுக்கு தள்ளப்படும் சூழல் இருக்கிறது. தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Dindigul - Pollachi National Highway , Barrier, Dindigul - Pollachi, Road
× RELATED தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு...