அடுத்த 3 ஐபிஎல் சீசன்களுக்கு மகேந்திர சிங் தோனியை தக்க வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு!!

சென்னை : அடுத்த 3 ஐபிஎல் சீசன்களுக்கு மகேந்திர சிங் தோனியை தக்க வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. தோனி மட்டுமல்லாது ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கிறது. ஒரு அணி குறைந்தபட்சம் 4 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்பதால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் மொயீன் அலியை தக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு வேளை மொயீன் அலி சம்மதிக்காத பட்சத்தில் மற்றொரு இங்கிலாந்து வீரர் சாம் கரண் நான்காவது வீரராக தக்கவைக்கப்படலாம்.

முதல்முறையாக சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்படவில்லை என்று தெரியகிறது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரிஷப் பன்ட், அக்ஷர் படேல், பிரித்வி ஷா மற்றும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் ஆன்ரிச் நார்க்கியாவை தக்க வைத்து கொண்டது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல மும்பை வீரர் சூர்ய குமாரிடமும் லக்னோ அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கொல்கத்தா அணியின் சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தியை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணி ரோஹித் ஷர்மா, பும்ரா, பொல்லார்டு, இஷன் கிஷான் ஆகியோரை தக்கவைக்க வாய்ப்பு உள்ளது. நவம்பர் 30ம் தேதிக்குள் தக்க வைத்த வீரர்களின் விவரத்தை அணிகள் அறிவிக்க வேண்டும் என்பதால் இன்னும் ஓரிரு தினங்களில் அடுத்த அறிவிப்புகள் வெளியாகலாம்.

Related Stories: