வேதா இல்ல விவகாரத்தில் அதிமுக உரிய முடிவு எடுக்கும்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டத்தில் எந்த வாக்குவாதமும் நடைபெறவில்லை. மகிழ்ச்சியாக  கூட்டம் நடந்தது. கட்சியில் சில கருத்து பரிமாற்றங்கள் இருக்கும்.  அதற்காக வருத்தம் தெரிவித்தோம். அதிமுகவின் தொண்டர்கள், பொதுமக்கள் எண்ணங்களில் வேதா இல்லம் கோயிலாக இருக்கிறது.

அந்த இல்லம் நினைவிடமாக உருவாக்கப்பட வேண்டும் என்கிற வகையில்தான் நினைவு இல்லமாக திறக்கப்பட்டது. நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில் கட்சி உரிய நேரத்தில் அதற்கான முடிவை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More