×

நடிகை கத்ரினா கைப் கன்னத்துடன் சாலைகளை ஒப்பிட்ட ராஜஸ்தான் அமைச்சர்: வீடியோ வெளியானதால் பரபரப்பு

ராஜஸ்தான்: பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைப் கன்னத்துடன் சாலைகளை ஒப்பிட்டுப் பேசிய ராஜஸ்தான் அமைச்சரின் வீடியோ வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவி வகிக்கிறார். ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேந்திர குடா. கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது அமைச்சரவையில் மாற்றம் செய்தபோது ராஜேந்திர குடாவுக்கு வாய்ப்பு வழங்கினார்.

அமைச்சரான பிறகு தனது தொகுதிக்கு முதல்முறையாக சென்ற ராஜேந்திர குடா, பாவோன்க் கிராமத்தில் ​​கூடியிருந்த உள்ளூர் மக்களிடம் பேசினார். அப்போது அவர்கள், தரமான சாலைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த ராஜேந்திர குடா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஒருவரிடம், ‘எனது தொகுதியின் சாலைகள் நடிகை கத்ரினா கைப் கன்னங்கள் போல் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவெளியில் அமைச்சர் நடிகையின் கன்னங்களை ஒப்பிட்டுப் பேசலாமா என்று பல்வேறு தரப்பினர் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Tags : Rajasthan ,Minister ,Katrina Kaif , Rajasthan Minister compares roads with actress Katrina Kaif's cheek: Excitement over release of video
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்