எப்ஐஆர் போடுங்க... எனக்கென்ன... ஒயினுடன் ஒய்யார போஸ் கொடுத்த கங்கனா ரனாவத்

மும்பை: சீக்கிய சமூகத்தை இழிவு படுத்தியதாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதற்கு சவால் விடும் வகையில், கவர்ச்சியான ஆடையில் கையில் ஒயின் சகிதமாக ஒய்யாரமான படத்தை நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டெல்லி சிரோன்மணி குருத்வாரா பாராமரிப்பு கமிட்டி சார்பில் மும்பையை சேர்ந்த வர்த்தகர் அமர்ஜீத் சிங் சாந்து என்பவர் நடிகை கங்கனா ரனாவத்துக்கு எதிராக கார் போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதில், கங்கனா ரனாவத் சீக்கியர்களை இழிவு படுத்தும் விதமாக கருத்துக்களை கூறிவருகிறார்.

டிவிட்டரிலும் இதர உடகங்களிலும் வெளியிட்டு வருகிறார். டெல்லியில் நடந்த விவசாய போராட்டத்தை காலிஸ்தான் இயக்கத்தினர் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். சீக்கிய சமூகத்தை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் வர்ணித்துள்ளார். கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான படுகொலை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் திட்டப்படி நடந்ததாகவும், சீக்கியர்களை இந்திரா காந்தி தனது காலில் போட்டு மிதித்துவிட்டதாகவும் கங்கனா குறிப்பிட்டுள்ளார். எனவே, கங்கனாவின் பேச்சுக்கள் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் மனங்களை புண்படுத்தியுள்ளது.

அவர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து ரனாவத் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 295ஏ-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் சவால் விடும் வகையிலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா படம் வெளியிட்டுள்ளார். அதில், கவர்ச்சியான உடை அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுக்கிறார் கங்கனா. அதோடு அதில், இன்னொரு நாள்... இன்னும் ஒரு எப்ஐஆர்... ஒரு வேளை என்னை கைது செய்ய அவர்கள் வந்தால்... நான் வீட்டில் வேறொரு மூடில் இருக்கிறேன்... என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: