சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் பள்ளி மாணவ, மாணவி வீரசாகசம்: சமூக வலைத்தளங்களில் பரவும் வைரல் வீடியோ

கும்மிடிப்பூண்டி:  கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் தொங்கியபடி செல்லும் பள்ளி மாணவ மாணவி சாகசம் செய்யும் விடியோ வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை, பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000 மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, ஏலியம்பேடு, புதுகும்மிடிப்பூண்டி, அய்யநல்லூர், கிளி கோடி, தச்சூர் கூட்டுச்சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மேற்கண்ட பள்ளிக்கு மாணவர்கள் வருவதும் போவதும் வழக்கம்.

தற்போது கொரோனா என்பதால் நீண்ட நாட்களுக்கு பின்பு அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு அரசு பேருந்து மற்றும் ரயிலில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் மார்கத்தில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் செல்லும் புறநகர் ரயிலில் பள்ளி சீருடை அணிந்த மாணவி வேகமாக ஓடி வந்து ஏறுகிறார். ஒரு காலை தொங்கவிட்டபடி பயணிக்கிறார். அவர் பின்னால் வந்த ஒரு மாணவன் வேகமாக ஓடிவந்து ஏறி தனது ஒருகாலை நடைமேடையில் தேய்த்தபடியே சிறிதுதூரம் சாகசத்தில்  ஈடுபடுகிறார்.  

இந்த வீடியோ காட்சிகள் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதுசம்பந்தமாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாரிடம் கேட்டபோது இதுபழைய வீடியோ என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப் குருப்பில் பதிவிட வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது போன்ற வீர சாகச வைரல் விடியோவை இளம் தலைமுறையினர் முயன்றால் பெரும் ஆபத்தில் முடியும் என்று  சமூக ஆர்வலர்கள் கூறினர்.  இதுகுறித்து ரயில்வே போலீசார் இது பழைய வீடியோ என்று மழுப்புகின்றனர்.

Related Stories: