×

நேரு பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சீ.சந்தானலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 21 பள்ளிகளில் இருந்து 21 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

பேச்சுப் போட்டியில் முதல் பரிசு 5 ஆயிரம் ரூபாயை திருவொற்றியூர் சங்கர வித்யகேந்திரா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவர் இர.சக்தியும் 2ம் பரிசு ரூ.3 ஆயிரம் பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ந.விஜயலட்சுமியும் 3ம் பரிசு ரூ.2 ஆயிரம் திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி இரா.காயத்ரியும் பெற்றனர். அரசுப் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக ₹2 ஆயிரம் திருவள்ளுர், தருமமூர்த்தி ராவ்பகதூர் கலவலக் கண்ணன் செட்டி இந்து மேனிலைப் பள்ளி மாணவி கோ.மோனி, ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி நா.வனிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றிப்பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை மாவட்ட கலெக்டரால் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில், அம்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் மற்றும் தமிழாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Nehru , Speech contest for students on the occasion of Nehru's birthday
× RELATED பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர்...