நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றவர்களுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் விடுத்துள்ள அறிக்கை: விரைவில் நடைபெற உள்ள திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்று சென்ற திமுகவினர் தங்களை பற்றிய முழு விவரங்களை  விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து உரிய கட்டணத்துடன் திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள என்.எஸ்.கே.டவரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் (இன்று) 25 ம் தேதி மற்றும் 26 ம் தேதி ஆகிய 2 நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கட்டண விவரம் நகராட்சி  உறுப்பினர் - ரூ. 10 ஆயிரம், பேரூராட்சி  உறுப்பினர் - ரூ. 2500, ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் போட்டியிடுவோர் கட்டணத்தில் பாதி தொகை மட்டுமே செலுத்த வேண்டும். இவ்வாறு  திமுக மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: