காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2014 - 18 வரையிலான தனித் தேர்வர்களின் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. கடந்த 2014 மார்ச் முதல் 2018 செப்டம்பர் வரை மேல்நிலை தேர்வுகளின் அனைத்து பருவங்களுக்குரிய உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத்தாட்களாக மாற்றிடும் பொருட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாதவர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பு என்பதால், சம்பந்தப்பட்ட தனித்தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் காஞ்சிபுரம், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட தேதிக்கு பின்னர் சான்றிதழ்கள் அழிக்கப்படும். அதன்பின், சான்றிதழ்களை பெற விரும்புவோர் இரண்டாம்படி சான்றிதழுக்கு உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.
சான்றிதழ்களை பெற விரும்புவோர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், (அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம்), நசரத்பேட்டை, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பிரதான சாலை, காஞ்சிபுரம் 631 501 என்ற முகவரியில் அணுகி பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.