×

நவீன தொழில்நுட்ப சிகிச்சை மூலம் இதய தசை அழற்சியால் பாதித்தவரை காப்பாற்றிய காவேரி மருத்துவமனை

சென்னை: கொரோனாவால் இதய தசை அழற்சியால் பாதிக்கப்பட்ட 18 வயது இளைஞரை, இம்பெல்லா எனப்படும் நவீன தொழில்நுட்ப சிகிச்சை மூலம் காவேரி மருத்துவமனை காப்பாற்றியுள்ளது. இதுகுறித்து, சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், செயல் இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: மாரடைப்பு, இதய செயலிழப்பு அல்லது பக்கவாத நேர்வுகளில் உடனடி சிகிச்சையே உயிர்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவ நிபுணர்களின் உடனடி சிகிச்சை தேவைப்படுகிற நோயாளிகளுக்கு சிறப்பான தொழில்நுட்பத்தால் ஏதுவாக்கப்பட்டு எங்கள் மருத்துவமனையில் கிடைக்கும் இச்செயல்திட்டம் சிறப்பாக உதவும்.  

உயர் திறன் வாய்ந்த இதய சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் வல்லுனர்கள், உயிர்காக்கும் சிகிச்சைப் பிரிவினர் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு குழுவினருக்கு மேலும் உதவுகிறவாறு இந்த நவீன சாதன வசதியை கொண்டிருப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். இந்த நவீன சிகிச்சையின் மூலம் ஒரு இளம் நோயாளிக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து, உயிரை காப்பாற்றி தந்திருக்கின்ற மருத்துவர் அனந்தராமன் மற்றும் அவரோடு இணைந்து பணியாற்றிய மருத்துவக் குழுவினரை மனதார பாராட்டுகிறேன். நிபுணத்துவம் வாய்ந்த தீவிர சிகிச்சை மற்றும் தொழில்நுட்பம்  கிடைக்கப்பெறாதபோது கார்டியோஜெனிக் அதிர்ச்சி ஏற்பட்ட நோயாளிகள் மத்தியில்  உயிரிழப்பு விகிதம் மிக அதிகமாக (70 -90% வரை) இருக்கிறது. உடனடி சிகிச்சை  மற்றும் இச்சாதனத்தின் பயன்பாட்டின் மூலம் கிடைக்கும் ஆதரவினால்  உயிர்பிழைப்பு விகிதத்தை 60% க்கும் அதிகமாக உயர்த்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kaveri Hospital , Kaveri Hospital rescues victims of myocardial infarction with state-of-the-art treatment
× RELATED காவேரி மருத்துவமனையில் அறுவை...