×

பாதுகாப்பாக பயணம் செய்ய மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து: மநீம கோரிக்கை

சென்னை: நீதி மய்யம் சார்பில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அனுப்பியுள்ள கடிதம்: கொரோனா காலம் முடிந்து கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டதில் இருந்து, `பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்’ என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால், சென்னை மாநகரில் சாதாரண கட்டணம், விரைவு பேருந்து, சொகுசு பேருந்து என்று மூன்று வகையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சாதாரண கட்டணம் வசூலிக்கும் பேருந்தில் மட்டுமே மாணவர்கள் இலவசமாக பயணம் செய்ய இயலும்.

காலை நேரத்தில் பணிக்கு செல்வோரும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதால், கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய அவர்களுக்கென தனியாக ‘மாணவர் சிறப்பு பேருந்து’ இயக்கப்பட வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை கவனத்தில் கொண்டு,  தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக தனி பேருந்து இயக்கப்படுவதை அரசு விரைவாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Manima , Special bus for students to travel safely: Manima request
× RELATED சொல்லிட்டாங்க…