×

ஐசிஎப்பில் வேலை வாங்கி தருவதாக போலி சான்றிதழ் மூலம் ரூ.60 ஆயிரம் மோசடி: இருவர் கைது

அண்ணாநகர்: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான்சன்(55). இவருடைய மகன் பெயர் ராபின்யோவான்(23). அதேப்பகுதியில் வசித்து வந்தவர் பெருமாள்(64). ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர். இவர் சென்னை ஐ.சி.எப் தெற்கு ரயில்வே ஜாயிண்ட் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ராபின்யோவானின் தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கி தர ரூ.60,000 பணம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, தெற்கு ரயில்வே ஜாயிண்ட் ஆபிஸில் வேலை கிடைத்ததுபோல் ஒரு போலியான சான்றிதழை தயார் செய்து அவர்களுக்கு சந்தேகம் வராத வகையில் அலுவலகத்தின் முன்வைத்து பெருமாள் கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ராபின்யோவான் அந்த வேலை அனுமதி சான்றிதல் மீது சந்தேகம் எழுந்துள்ளது. உடனே, இது சம்பந்தமான நபர்களிடம் காண்பித்து இது குறித்து கேட்டுள்ளார். பின்னர்தான், அது போலீயானது என தெரியவந்தது. இதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கடந்த 19ம் தேதி ராபின்யோவன் ஐ.சி.எப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று ஐ.சி.எப் பகுதியில் பதுங்கியிருந்த திருநெல்வேலி பெருமாள் ராமாபுரம் லெனின்(37) ஆகியோரை கைது செய்து ரூ.55 ஆயிரத்தை  பறிமுதல் செய்தனர்.

Tags : Two arrested for forging Rs 60,000 with fake certificate of employment in ICF
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது