டிச.1ல் அதிமுக செயற்குழு

சென்னை: அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 1ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து இபிஎஸ், ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற 1.12.2021ல் காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும். அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: