×

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி, காய்கறிகள் விற்கப்படும்: குறைந்த விலை பட்டியல்: தமிழ்நாடு அரசு நடவடிக்கை..!

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி, காய்கறிகள் விற்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ 85- முதல் 100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பருவ மழைக்காலம் என்பதால் வரத்து இல்லாத நிலையில் தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு சில்லறை விலையில் ரூ 130 முதல் 150 வரையும் மொத்த விலையில் ரூ 100 முதல் ரூ 130 வரையும் விற்கப்படுகிறது.

இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனிடையே தக்காளியை அதிக விலைக்கு விற்க யாராவது பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார். தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகளின் விலை குறிப்பாக தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மேலும், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி மற்றும் காய்கறிகளின் குறைந்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

தக்காளி ரூ.79, உருளைக்கிழங்கு ரூ.38, வெண்டைக்காய் ரூ.70 சுரக்காய் ரூ.43 பீட்ரூட் ரூ.40 பீன்ஸ் ரூ.70 கோஸ் ரூ.28 கொத்தமல்லி ரூ.15 புதினா ரூ.04 பச்சை மிளகாய் ரூ.32 கத்தரிக்காய் ரூ.65 கத்தரிக்காய் ரூ.68 சௌ சௌ ரூ.20 நூக்கல் ரூ.42 வெள்ளரிக்காய் ரூ.15 முருங்கை காய் ரூ.110 என்ற விலையில் கூட்டுறவு கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Tamil ,Nadu , Tamil Nadu, Ration Shops, Vegetables, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...