கேரளாவில் சட்டம் படித்து வரும் மாணவி கணவர் வீட்டாரின் கொடுமை தாங்காமல் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை

கேரளா: கேரளாவில் சட்டம் படித்து வரும் மாணவி கணவர் வீட்டாரின் கொடுமை தாங்காமல் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலுவாவில் முகமது சுகைல் மற்றும் மோஃபியா பர்வின் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலித்து கடந்த ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

வேலைக்கு செல்லாத முகமது சுகைல் எந்த நேரமும் செல்போனில் மூழ்கிக்கிடந்ததாகவும் ஒரு கட்டத்தில் வரதட்சணை கேட்டு முகமது சுகைல் மோஃபியாவை துன்புறுத்தியதாக கூறப்பட்ட நிலையில் மோஃபியாவின் குடும்பத்தினரிடத்தில் வரதட்சணையாக கொடுக்க பணம் இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்டவள் என்று முகமது சுகைலின் குடும்பத்தினர் பரப்பியதாக கூறப்படுகிறது.

கொடுமையின் உச்சகட்டமாக மோஃபியாவின் உடலில் டாட்டூ வரைந்து முகமது சுகைல் ரசித்ததாக மோஃபியா உடன் படிக்கும் சக மாணவர் குற்றம் சாட்டியுள்ளார். முகமது சுகைலின் தாயும் தந்தையும் கூட மருமகளை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சில வாரங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்த மோஃபியா தந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் மோஃபியா ஆலுவா காவல்நிலையத்தில் தன் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது புகார் அளித்து சென்றுள்ளார். ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் முகமது சுகைலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. காவல்நிலையத்தில் கணவர் முகமது சுகைலை மோஃபியா கன்னத்தில் அடித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஆலுவாவிலுள்ள வீட்டிற்கு திரும்பிய மோஃபியா தற்கொலை செய்து கொண்டார்.

தன் தற்கொலை கடிதத்தில் ஆலுவா காவல்நிலைய இன்ஸ்பெக்ட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் குறிப்பிட்டுள்ளார். தானும் தன் தந்தையும் புகார் கொடுக்க சென்ற போது தங்களை மிகவும் மோசமாக இன்ஸ்பெக்ட்டர் நடத்தியதாகவும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் மோஃபியா கூறுகையில் தனது அப்பாவிடம் மன்னிப்பு கேட்டும், என்னால் இனிமேல் உயிர் வாழ முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் தன் கணவர் செய்த கொடுமையால் தான் மனநோயாளி போல் ஆகிவிட்டதாகவும், கடைசியில் என்னால் அவனை அடிக்க முடிந்தது அப்படி செய்யவில்லை என்றால் தான் உயிரோடு இருக்கும்போது தவறிழைத்தவள் ஆகிவிட்டவள் ஆகிவிடுவேன் என்றும் மோஃபியா தெரிவித்துள்ளார். அவனை அடித்ததன் மூலம் தனது கடைசி நிறைவேறிவிட்டதாகவும் எனவும் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

முகமது சுகைல் மற்றும் அவனது தாய் தந்தை ஆகியோருக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்தால்தான் தனது மனது ஆறும் என்று மோஃபியா குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து  முகமது சுகைல் மற்றும் அவனது தாய் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மோஃபியாவின் கடிதம் கைப்பற்றப்பட்டதையடுத்து இன்ஸ்பெக்டரிடம் மேல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories:

More