×

பேரறிவாளன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்: கோரிக்கையை ஏற்று வழக்கை 7ம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவு..!

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கு வரும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து 161 ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்கலாம் என கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இதனையடுத்து, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்திருந்தார்.

மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற டிசம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. வழக்கை விரைந்து விசாரிக்க பேரறிவாளன் தரப்பு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பாரிவேந்தன் கோரிக்கையை ஏற்று வழக்கை பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Supreme Court ,Perarivalan , Perarivalan, Petition, Inguriya, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...