ஓபிஎஸ்-இபிஎஸ் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்த சிவி சண்முகம்: அதிமுக கூட்டத்தில் பரபரப்பு

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை, மற்றொரு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கப் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். அதில், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவும் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, தேர்தல் தோல்வி குறித்தும், சசிகலா விவகாரம் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. அவர் பேசிக் கொண்டிருந்தபோது முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சி.வி.சண்முகம் எழுந்து ஒருமையில் பேசி உட்காரும் படி கூறியுள்ளார். அப்போதும் அன்வர்ராஜா தனது கருத்தை தெரிவித்தபோது, ஆத்திரத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது இருக்கையில் இருந்து எழுந்து அன்வர் ராஜா அடிக்க பாய்ந்தார்.

அப்போது அருகில் இருந்த மற்ற அதிமுக நிர்வாகிகள் அவரை பிடித்துக் கொண்டனர். இதனால் அந்தக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கட்சியின் மூத்த தலைவராக உள்ள அன்வர் ராஜாவை சி.வி.சண்முகம் அடிக்கப் பாய்ந்தது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக அன்வர் ராஜா, சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து ெதரிவித்து வந்தார். சி.வி.சண்முகம், சசிகலாவை கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் இந்த பிரச்னையும் அவர்களுக்குள் இருந்து வந்ததால், இந்த மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: