×

சுசீந்தரம் கோயிலில் ஓவியங்கள் மூலிகைகளால் ஆன இரசாயன கலவையால் புதுப்பிப்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் அருள்மிகு தாணுமலையான் சுவாமி திருக்கோயிலில் ஓவியங்கள் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட இரசாயன கலவையோடு புதுபிக்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (24.11.2021) கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் அருள்மிகு தாணுமலையான் சுவாமி திருக்கோயில், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசும்போது, பிரசித்தி பெற்ற பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சுசீந்தரம் அருள்மிகு தாணுமலையான் சுவாமி திருக்கோயிலில் இத்திருத்தலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் மூலவர் சன்னிதானத்தில் மழைநீர் தேங்கியிருந்த நிலையை அனைவரும் அறிவார்கள். இதை பத்திரிக்கை தொலைகாட்சி வாயிலாக கண்ட தமிழ்நாடு முதலமைச்சர் இத்திருக்கோயிலை பார்வையிட அறிவுறுத்திருந்தார். அந்த வகையிலே 2011 - 12 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று புராதானங்களை விளக்குகின்ற வகையில் ஓவியங்கள், நீர்கசிவால் பாழடைந்து போகிறது என்று நீதிமன்றத்தில் பதிவிட்ட வழக்கினை தொடர்ந்து கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்காக இருந்தாலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திருக்கோயிலின் ஓவியங்களை பாதுகாக்கின்ற பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டு தற்போது மூலிகைகளால் உருவாக்கப்பட்ட இரசாயன கலவையோடு இந்த ஓவியங்கள் புதுபிக்கப்பட்டுள்ளது.

தாயுமானவர் சன்னதி 2004 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு 12 ஆண்டுகள் கழித்து ஆகம விதிபடி திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடைபெற்றிருக்க வேண்டும். தற்போது மண்டல குழுவினுடைய ஆய்வு முடிவுக்கு பிறகு தொடர்ச்சியாக மாநில குழுவின் ஆய்வு நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட குழுவின் அறிவுரையின்படி வெகு விரைவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும். கடந்த முறை வருகை தந்தபோது திருத்தேர் பாதுகாப்பை பலபடுத்த சொல்லியும், திருக்குளத்தை சுத்தம் செய்யவும் அறிவுரை வழங்கியிருந்தோம். அதற்கு உண்டான பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

அதேபோல் திருக்கோயில் பணியாளர்கள் ஊதிய பற்றாக்குறையை எடுத்துக் கூறியிருந்தார்கள். இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். சமீபத்தில் பெய்த கனமழையினால் துறை கட்டுப்பாட்டில் உள்ள சில திருக்கோயில்களில் மழை நீர் தேங்கி பக்தர்களுக்கு இடையூறாக இருந்த சூழ்நிலையில் மழைநீரை அகற்றும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மழைநீர் அகற்றிய பின்பு பக்தர்கள் இறை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். திருக்கோயில் தூய்மை திட்டத்தின்கீழ் அனைத்து திருக்கோயில்களிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் மாதம் ஒருமுறை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகஸ்டின் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Tags : Temple of ,Susindaram Refresh ,Minister ,P. Q. Sebabu Information , PK Sekarbabu
× RELATED புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்