ஒரே ஆண்டில் 2வது முறையாக மறுகால் பாயும் மன்னவனூர் ஏரி

கொடைக்கானல் :கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தில் உள்ளஐ எழுபள்ளம் ஏரி. இப்பகுதி பாசனத்திற்கு ஆதாரமான இந்த ஏரி, தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. கடந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் முழு கொள்ளவை எட்டிய எழுபள்ளம் ஏரி, இந்த ஆண்டு 2வது முறையாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இதன்மூலம் இந்த ஆண்டின் இறுதியில் பயிரிடப்படும் பீன்ஸ், பட்டாணி, உருளை பயிர்களின் விவசாயத்திற்கும், அடுத்த ஆண்டின் முதல் போகத்திற்கும் ஏரியின் நீர் பயன்படும் என அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Stories: