×

சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

குன்னூர் :  குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மினியேச்சர் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நுற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இவைகளை காண உள் நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் கோடை சீசன் மற்றும் 2வது சீசனுக்கு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு லட்சக்கணக்கான நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது. மேலும் இங்கு ஏற்கனவே குறிஞ்சி மலர் நாற்றுகள் நடவு செய்து வளர்க்கப்பட்டு வருகிறது.

இதில் ஸ்டபிலான்தஸ் மினியேச்சர் வகை நீலக் குறிஞ்சி மலர்கள் தற்போது பூக்கத் துவங்கியுள்ளன. இது சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விருந்தாக அமைந்துள்ளது. பூங்காவில் படகு இல்லம், இந்திய வரைபடம், நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் இந்த குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.நீலகிரி வனப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர்கள் பூக்கிறது. அதேநேரத்தில் சிம்ஸ் பூங்காவில் வீரிய ரகத்தில் வளர்க்கப்பட்ட இந்த செடிகள் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.

Tags : Sims , Coonoor: Miniature Kurinji flowers bloom at Coonoor Sims Park. Centenary at Coonoor Sims Park, Nilgiris District
× RELATED தாவரவியல் பூங்காவில் நடவு...