×

நோய் அறிகுறிகளுடன் கூடிய கொரோனா வைரஸை தடுப்பதில் கோவாக்சின் திறன் 50% தான்!: புதிய ஆய்வில் தகவல்

டெல்லி: நோய் அறிகுறிகளுடன் கூடிய கொரோனா வைரஸை தடுப்பதில் கோவாக்சின் தடுப்பூசிக்கு 50 சதவீதமே திறன் உள்ளது என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டு மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். சமீபத்தில், கோவாக்சின் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு பச்சை கொடி காட்டியுள்ளது. இந்நிலையில், ரியல் - வேர்ல்டு என்ற சுயேட்சையான அமைப்பு கோவாக்சின் தடுப்பூசியின் திறன் பற்றி ஆய்வு செய்தது.

இந்த ஆய்வின் முடிவில் 2 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட அறிகுறி உள்ள கொரோனா பாதிப்பை 50 சதவீதமே தடுக்கிறது என்பது தெரியவந்தது. இரு தடுப்பூசிகளையும் செலுத்தியபின் உடலில் தடுப்பூசி 7 வாரங்களுக்கு அதன் செயல்பாடு நிலையாக இருக்கிறது என ஆய்வில் தெரியவந்தது. ரியல் - வேர்ல்டு ஆய்வின் போது இந்தியாவில் டெல்டா வைரஸ் பாதிப்பு அதிகம் நிலவியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாகப் பரவிய காலத்தில் கடந்த ஏப்ரல் 15 முதல் மே 15ம் தேதி வரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 2714 பேரில் 1617 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் 1097 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக பாரத் பயோடெக் 3வது கட்ட ஆய்வுக்கு பின், கோவாக்சின் நோய் தடுப்பு திறன் 77.8 சதவீதம் இருப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Symptomatic, corona, covaxin vaccine
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...