திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.திராவிட இயக்க முன்னோடியும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன் 18வது நிைனவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலிமாறன் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான த.வேணுகோபால் தலைமை தாங்கினார்.

திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை, மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், தொமுச மாநில செயலாளர் க.சவுந்திரராஜன், ஒன்றிய செயலாளர்கள் மெய்யூர் சந்திரன், கோவிந்தன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் செய்திருந்தார்.அப்போது, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் திருவுருவ படத்துக்கு, திமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, காலேஜ் ரவி, பிரியா விஜயரங்கன், குட்டி புகழேந்தி, பா.ஷெரீப், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசு, இல.குணசேகரன், அருள்குமரன், கருணாமூர்த்தி, இரா.சீனுவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: