×

மீண்டும் வீட்டை உடைத்து அட்டகாசம் காட்டு யானைகளை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு

கூடலூர் : கூடலூரை அடுத்த செலுக்காடி பகுதிக்கு முதுமலையில் இருந்து சீனிவாசன், உதயன் ஆகிய இரு கும்கி யானைகள் வரவழைக்கப் பட்டுள்ளன.   நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பாடந்துரை செலுக்காடி, மூச்சிகண்டி , சுண்டவயல் பகுதியில் அரிசி ராஜா மற்றும் அதுனுடன் இருக்கும் யானைகள் தொடர்ந்து வீடுகளை சேதப்படுத்தி வந்தன. இதையடுத்து கும்கி யானை உதவியுடன் ஒரு வாரத்திற்கு முன் இந்த யானைகள் வனத்திற்குள் விரட்டப்பட்டன.

இந்த நிலையில் மீண்டும் வனத்திலிருந்து வெளியேறிய யானைகள் இப்பகுதிகளில் உள்ள வீடுகளை சேதப்படுத்தின. இவ்விரண்டு யானைகளை விரட்டுவதில் எந்த பயனும் இல்லை எனவும் அவை மீண்டும் மீண்டும் ஊருக்குள் வந்து வீடுகளை உடைப்பதை வாடிக்கையாக கொண்டதால் உயிர் சேதம் ஏற்படும் முன் வீடுகளைத் தாக்கி வரும் குறிப்பிட்ட யானையை  பிடித்து முதுமலை காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு வேடன் வயல் பகுதியில் வசிக்கும் முருகதாஸ் என்பவரின் வீட்டை  இதே யானைகள் உடைத்துள்ளன. வீட்டில்  இருந்த அனைவரும் வேறு அறைக்குள் பதுங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து கூடலூரை அடுத்த செலுக்காடி பகுதிக்கு முதுமலையில் இருந்து சீனிவாசன், உதயன் ஆகிய இரு கும்கி யானைகள் வரவழைக்கப் பட்டு யானைகளை விரட்டும் பணி நடக்கிறது.

Tags : Kumkis , Cuddalore: Two Kumki elephants, Srinivasan and Udayan, have been brought from Mudumalai to the Selukkadi area next to Cuddalore.
× RELATED பந்தலூர் அருகே வீடுகளை இடித்து...