×

நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு புரளி: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு சாலையில் நடிகர் அஜித்குமார் வீடு உள்ளது. அங்கு அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அஜித்குமார் வீட்டில், வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் அது வெடிக்க உள்ளது எனவும்  காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர்  தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் நீலாங்கரை போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்கவில்லை. பிறகு புரளி என தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபர் யார், எங்கிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, ஏற்கனவே நடிகர்கள் விஜய், முன்னாள் முதல்வர் எடப்பாடி, நடிகர் ரஜினி உள்ளிட்டோருக்கு    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ்குமார் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு புரளி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ajithkumar ,Chennai ,Ajith Kumar ,East Road, Chennai ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...