இன்று இரவு உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி... தமிழ்நாட்டுக்கு நவ.25, 26, 27-ல் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை!!

சென்னை : தமிழ்நாட்டுக்கு நவ.25, 26, 27-ல் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக மேலும் 24 மணி நேரமாகக் கூடும். தெற்கு வங்கக்கடலில் 5.8 கிமீ உயரத்தில் மேலடுக்கு சுழற்சி இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவெடுக்கும்.தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதுவரை மாற்றம் இல்லாமல் நீடிக்கிறது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் பட்சத்தில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.தமிழ்நாட்டின் இதர கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் மழை பெய்யும்.

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதால் தமிழ்நாட்டில் நவம்பர் 25,26,27ல் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்.விழுப்புரம், தி.மலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டையில் கனமழை பெய்யும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: