போதுமான அளவு உற்பத்தி இருப்பதால் உரத் தட்டுப்பாடு இல்லை: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ‘நாட்டில் எங்கும் உரத் தட்டுப்பாடு இல்லை. யூரியா உரத்தை தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படுத்துவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்’ என ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். ஒன்றிய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு உட்பட 18 மாநில வேளாண் அமைச்சர்களுடன் நேற்று காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: அனைத்து மாநிலங்களுக்கும் அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி தேவையான உரத்தை எந்த தாமதமும் இன்றி ஒன்றிய அரசு விநியோகித்து வருகிறது. போதிய உரம் தயாரிக்கப்படுகிறது. எனவே, நாட்டில் எங்கும் உரத் தட்டுப்பாடு இல்லை. எனவே, உர விநியோகம், தேவையை மாநில அரசுகள் தினசரி அடிப்படையில் கண்காணிக்க வேண்டும். அதே சமயம், தொழிற்சாலை பயன்பாட்டிற்கு யூரியா உரத்தை மாற்றுவதை மாநில அரசுகள் தடுத்து, வேளாண் துறைக்கு போதுமான உரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: