×

தேனாம்பேட்டை காவல் நிலையம் இடமாற்றம்

சென்னை: தேனாம்பேட்டை காவல் நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட இருப்பதால், இங்கு செயல்பட்டு வரும் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து பிரிவு மற்றும் தேனாம்பேட்டை உதவி கமிஷனர் அலுவலகம் ஆகியவை, நாளை முதல் எண்: 2ஏ, ஆலயம்மன் கோயில் வளாகம், தியாகராய சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18 என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறது. இந்த கட்டிடத்தின் 2வது தளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து பிரிவும், 3வது தளத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவும், 4வது தளத்தில் குற்றப்பிரிவு மற்றும் தேனாம்பேட்டை உதவி கமிஷனர் அலுவலகமும் இயங்கும். எனவே, பொதுமக்கள் இந்த காவல் நிலையத்தை 94981 00186 மற்றும் 044-23452569 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Denampet , Denampet police station relocated
× RELATED கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்...