மழையால் பாதித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: சசிகலா வழங்கினார்

திருப்போரூர்: மதுரை, தஞ்சாவூர் உள்பட சில மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இதைதொடர்ந்து அவர், பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம், இள்ளலூர், கொட்டமேடு, மானாம்பதி ஆகிய பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் சசிகலா கலந்து கொண்ட சசிகலா, பொதுமக்களுக்கு அரிசி, புடவை, லுங்கி, காய்கறிகளை வழங்கினார். சில இடங்களில் காரை நிறுத்தி, பொது மக்களிடம் பேசிய சசிகலா, அங்கிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கினார்.

தொடர்ந்து, இள்ளலூர் பெரியார் நகரில் சாரதா என்பவரது குடிசை வீட்டுக்கு சென்று பார்வையிட்டார். சாரதாவின் மகள் தேவகி, மருமகன் முத்துக்குமார் ஆகியோரிடம் பேசிய சசிகலா குடும்ப வருமானம், குழந்தைகள் படிப்பு பற்றி விசாரித்தார். இதில், இள்ளலூர் ஊராட்சி தலைவர் தாண்டவமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முள்ளிப்பாக்கம் சுப்பிரமணி, செம்பாக்கம் பூபாலன், கொட்டமேடு பொன்னுசாமி, அமமுக ஒன்றிய செயலாளர் முட்டுக்காடு முனுசாமி உள்ப அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளின்போது சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

Related Stories:

More