தாயை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை கைதி கோர்ட்டில் ஆஜர்

செங்கல்பட்டு: போரூர் அருகே மாங்காடு அருகே மதனந்தபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் தஸ்வந்த். கடந்த 2018 பிப்ரவரி 15ம் தேதி, அதே அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சிறுமி ஹாசினியை கொலை செய்தார். இதுதொடர்பாக போலீசார், தஸ்வந்த்தை கைது செய்தனர். இதில் ஜாமீன் பெற்ற அவர், தனது தாய் சரளாவிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, தாயையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு, தலைமறைவானார். இதையடுத்து போலீசார், அவரை மும்பையில் கைது செய்தனர். தொடர்ந்து அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, சிறுமியை பாலியல் துன்புறுத்துலுடன் கொடூரமாக செய்ததால், தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இயைதடுத்து அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், அவரது தாயை கொலை செய்த வழக்கு, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில், தாய் சரளாவை கொலை செய்த வழக்கின் விசாரணை, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று வந்தது. இதையொட்டி தஸ்வந்த்தை, புழல் சிறையில் இருந்து போலீசார் அழைத்து வந்து, மாவட்ட முதன்மை நீதிபதி, மேவிஸ் தீபிகா சுந்தரவதனா முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, டிசம்பர் 14ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, தஸ்வந்த் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: