தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள்: எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளுர்: திருவள்ளூர் அடுத்த பட்டறைபெருமந்தூர் பகுதியில் உள்ள தெருக்கூத்து நடனக் கலைஞர்கள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் நிவாரணம் வழங்குமாறு பாதிக்கப்பட்ட தெருக்கூத்து நடன கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து 45 தெருக்கூத்து நடன கலைஞர்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள், வேட்டி, சேலை, பாய் போன்ற பொருள்களையும், தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண நிதி உதவியும் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் அருணா, வருவாய் ஆய்வாளர் கவுதம், கிராம நிர்வாக அலுவலர் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சுபாஷினி பாஸ்கர், ஊராட்சி தலைவர் மேனகா முத்து ஆகியோர் வரவேற்றனர். இந்த விழாவில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தெருக்கூத்து நாடக கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண உதவியும், தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவியும் வழங்கினார். இதில் திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கே.திராவிட பக்தன், ஒன்றிய செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், கே.அரிகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி பட்டறை பாஸ்கர், காஞ்சிப்பாடி சரவணன், கொப்பூர் டி.திலீப்குமார், ஆர்.மோகனசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More