×

தைப்பொங்கலுக்கு ஆவினில் 2.15 கோடி ஆவின் நெய் பாட்டில்கள் தயார்

சென்னை: ஆவின் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழக முதல்வர் 2022ம் ஆண்டு பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்ககைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை அறிவித்துள்ளார்.

ஆவின் மூலம் தை திருநாளாம் பொங்கலுக்கு மொத்தம் 2 கோடியே 15 லட்சம் 100 மி.லி நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றது. ஆவின் நெய் விற்பனை மூலம் தோராயமாக ரூ.135 கோடி வருமானம் கிடைக்கும்.  மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் அதாவது விவசாயிகள் பயன் பெறுவார்கள்.


Tags : Avin ,Thaipongal , 2.15 crore Avin ghee bottles are ready in Avin for Thaipongal
× RELATED கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை...