×

50 ஏக்கருக்கு மேல் சொந்த நிலமுள்ள கோயில்களுக்கு செயல் அலுவலர்கள்; ஆணையர் குமரகுருபரனிடம் பணியிட எண்ணிக்கை ஆய்வுக்குழு அறிக்கை

சென்னை: 50 இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களை நிர்வகிக்க வசதியாக புதிய பணியிடங்களை உருவாக்குவது, தேவையற்ற பணியிடங்களை நீக்குவதற்காக பணியிட எண்ணிக்கை ஆய்வுக்குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டது. இணை ஆணையர் சுதர்சன் தலைமையில் அமைக்கப்பட்ட  4 பேர் கொண்ட குழு  ஆய்வு செய்து ஆணையர் குமரகுருபரனிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* சொத்துகளை பாதுகாக்கும் வகையில் சொத்துகளில் இருந்து வருமானம் ஈட்டும் வகையில் கூடுதலாக நிலை-3, நிலை-4 செயல் அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

* குறைந்தபட்சம் 50 ஏக்கர் மேல் சொந்தமாக நிலங்கள் உள்ள கோயில்களை மூன்று அல்லது நான்கு கோயில்களை ஒருங்கிணைத்து நிலை-4, நிலை-3 செயல் அலுவலர் நியமனம் செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு வருவாய் வட்டத்திற்கும் ஒரு ஆய்வர் பணியிடம் இருக்கும் வகையில் ஆய்வர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். 100க்கு அதிகமாக கோயில்கள் இருக்கும் பட்சத்தில் வருவாய் வட்டத்திற்கு கோயில்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதலாக ஆய்வர் பணியை உருவாக்க வேண்டும்.

* மூன்று இணை ஆணையர் மண்டலங்களுக்கு ஒரு கூடுதல் ஆணையர் அலுவலகம் வீதம் ஏழு கூடுதல் ஆணையர் அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும். மேற்படி கூடுதல் ஆணையர் அலுவலகம் நில நிர்வாகம், திருப்பணி தொடர்பான பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

* துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) பணியிடங்களை உதவி ஆணையர் நிலைக்கு நிலையிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Workplace ,Inspection Committee ,Kumaraguruparan , Executive officers for temples owning more than 50 acres; Report of Workplace Number Inspection Committee to Commissioner Kumaraguruparan
× RELATED தமிழ்நாடு முழுவதும் அனைத்து...