தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று பரவல்

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 741 பேருக்கு கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்டது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1 லட்சத்து 548 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 741 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அந்தவகையில், கொரோனாவிற்கு 8,536 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 808 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,76,825 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதிகபட்சமாக நேற்று கோவையில் 119 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் 114 பேருக்கும், செங்கல்பட்டு 57, ஈரோடு 78, திருப்பூர் 57, நாமக்கல் 43 பேருக்கும் தொற்று பதிவாகியது. 30 மாவட்டங்களில் நேற்று உயிரிழப்பு பதிவாகவில்லை. 22 மாவட்டங்களில் பாதிப்பு 10க்கும் கீழ் குறைந்துள்ளது. தூத்துக்குடியில் நேற்று யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: