×

டிஜிட்டல் நாணயம், கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: டிஜிட்டல் நாணயம், கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை இந்தியாவில் தடை செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட உள்ளது. கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை 2021 சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்திற்கான கட்டமைப்பை ஆர்பிஐ உருவாக்கும் வகையில் மசோதா நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் கிரிப்டோகரன்சியை வழங்குவதற்கு புதிய சட்ட மசோதா வழிவகை செய்யும்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நவம்பர் 29ம் தேதி மக்களவையில் தாக்கலாகிறது. கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்திருந்தார். ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தின் போது 600 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

Tags : EU Government , Digital currency, cryptocurrency
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...