தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 741 பேருக்கு கொரோனா உறுதி, 13 பேர் உயிரிழப்பு, 808 பேர் குணம்: சுகாதாரத்துறை அறிக்கை

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 741 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 227,21,762ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து மேலும் 808 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 13-பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1,00,817 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் மேலும் 114 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More