தருமபுரி மாவட்ட அதிமுக மருத்துவர் அணி செயலாளரான போலி மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு போலீஸ் வலை

தருமபுரி: தருமபுரி மாவட்ட அதிமுக மருத்துவர் அணி செயலாளரான போலி மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு போலீஸ் வலை வீசியுள்ளனர். ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததால் கிருஷ்ணசாமி கிளினிக்குக்கு சீல் வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் விஜயா கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார் கிருஷ்ணசாமி. அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கிருஷ்ணசாமி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது அம்பலமானது. கிருஷ்ணசாமியின் கிளினிக்கில் இருந்த ஆங்கில மருந்துகள், ஊசிகள், மாத்திரைகளை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர். அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டிருக்கும் போதே சான்றிதழ்களை எடுத்து வருவதாக கூறி கிருஷ்ணசாமி தப்பி ஓடியுள்ளார். தலைமறைவான அதிமுக மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமியை போலீஸ் தேடி வருகிறது. கிருஷ்ணசாமி மீது ஏற்கனவே புகார்கள் வந்தபோதும் அதிமுக ஆட்சி நடந்ததால் போலீசார் அவரை கைது செய்யவில்லை.

Related Stories: