×

10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை...மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறும்.: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டைப் போலவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  கூறியுள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதிய ஆன்லைன் நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 2.65 லட்சம் ஓலைச் சுவடிகள் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதனையடுத்து பேசிய அவர், இந்த ஆண்டு 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 8.75 லட்சத்துக்கு மேல் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதாக  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  கூறியுள்ளார். மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு உள்ளதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதய நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். அதனைதொடர்ந்து கூறிய அமைச்சர், தொற்று குறைந்தவுடன் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் கைவிடப்படும். மாணவர்கள் புகார் தெரிவிக்க 1098 மற்றும் 14417 ஆகிய உதவி எண்கள் குறித்து அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


Tags : Makesh , General elections for Class 10 and 12 are not likely to be postponed ... General elections will be held in March and April: Minister Anbil Mahesh
× RELATED நாகர்கோவில் மாநகர பகுதியில் மழை நீர்...