×

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 11 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ரங்காசமுத்திரம் ஏரி: கிடா வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விவசாயிகள்

சேலம்: தமிழகத்தில் மழை பொழிவு குறைந்ததால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 45,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 30,000 கன அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து நீர்மின்நிலையம் வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீர் வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.10 கன அடியாகவும், நீர் இருப்பு 93.63 டிஎம்சி-யாகவும் உள்ளது. இதேபோல் ஆந்திர மாநிலத்தில் மழைப்பொழிவு குறைந்ததால் பிச்சாட்டூர் அணையிலிருந்து ஆரணி ஆற்றுக்கு திறந்து விடப்படும் உபரி நீர் படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று வினாடிக்கு 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை, மன்னவனூர், எழுபள்ளம் ஏரி முழுகொள்ளளவை எட்டியுள்ளது.

கடந்த தென்மேற்கு பருவமழை காலங்களிலும் முழுகொள்ளளவை எட்டிய எழுபள்ளம் ஏரி இந்த ஆண்டு 2வது முறையாக நிரம்பியுள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதியில் பயிரிடப்படும் பீன்ஸ், பட்டாணி, உருளை பயிர்களின் பாசனத்திற்கும் அடுத்த ஆண்டின் முதல் போகத்திற்கும் ஏரியின் நீர் பயன்படும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அரக்கோணம் நெமிலி வழித்தடத்தின் கல்லாற்றில் உள்ள தரைப்பாலத்தில் 4 அடி உயரத்திற்கு வெள்ளநீர் செல்வதால் ஒரு வாரத்திற்கு மேலாக பக்குவரது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் அரக்கோணம் வழியாக வேலூர் செல்லக்கூடிய பேருந்துகள் 30 கி.மீ தூரம் சுற்றி செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

திருபுவனத்திற்கும் வேப்பத்தூருக்கும் இடையே காவிரி ஆற்றிலிருந்து சிமெண்ட் கான்கிரீட் பாலம் சேதமடைந்தது தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட தற்காலிக மரபாலமும் சேதமடைந்தது. ஆபத்தை உணராத திருபுவனதுர், வேப்பத்தூர் மக்கள் சேதமடைந்த பாலத்தில் உயிரை பணயம் வைத்து பயணித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 11 ஆண்டுகளுக்கு பிறகு ரங்காசமுத்திரம் ஏரி நிரம்பியதால் அப் பகுதி விவசாய மக்கள் ஏரிக்கரை முனியப்பனுக்கு கிடா வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குரும்பப்பட்டி கிராமத்திலுள்ள புங்கனேரி ஏரி, ரங்காசமுத்திரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Tags : Rangsea lake ,Edibati, Salem district , Rangasamudram Lake overflows after 11 years near Edappadi in Salem district: Farmers express their happiness by cutting the kida
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை