×

அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த வகுப்புகள் தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் சமய வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் கடந்த 04.09.2021 அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 02.11.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இக்கல்லூரியில் ஆன்மீக சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில் வைச சித்தாந்தம் வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் இல்லை. சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்தப்படும். சான்றிதழ் படிப்பிற்கான கல்விக்கட்டணம் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். இந்த ஆன்மீகம் தொடர்பான வகுப்புகளில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணபித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags : Arulmigu Kabaliswarar College of Arts and Sciences , Arulmigu Kabaliswarar College of Arts and Sciences
× RELATED யானை தாக்கி விவசாயி பலி